தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தபின் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் ஒரு ஜனநாயக கட்சி என்றும் எந்த தலைவர்களின் படத்தையும் பயன்படுத்த தடையில்லை என்றும் கூறினார். அதாவது சட்டை பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் வந்து அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் அது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்வி கேள் அவர் இவ்வாறு பதில் வழங்கி இருந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோருடன் விஜய் இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் பேனர் மற்றும் அவரது காரிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை மாற்றினார். தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு மற்றும் நான்கு மாவட்டங்களில் அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 இல் தமிழகத்தின் முதல்வராக விஜய் கண்டிப்பாக வருவார். தற்போது தமிழக மக்கள் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளையும் விரும்பவில்லை. என் உயிர் மூச்சு உள்ளவரை நான் விஜய்க்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்பேன். மேலும் ஆண்டுக்கு 500 கோடி வருவாயை உதறி தள்ளிவிட்டு நடிகர் விஜய் மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வந்துள்ளார் என்று கூறினார்.
