அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் அது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அவர் பேசியதாவது, அண்ணன் செங்கோட்டையன் மீது எனக்கு மிகுந்த மதிப்பு மரியாதையும் இருப்பதால் இது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை அவர் எங்கிருந்தாலும் வாழ்க. நான் உயிர் இருக்கும் வரை அதிமுகவில் மட்டும்தான் இருப்பேன் என் உயிர் பிரிந்தாலும் அதிமுக கொடிதான் என் மீது பொருத்தப்படும்.

அதிமுகவில் எனக்கு பல பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது எனவே என் வாழ்நாள் வரை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகழைப்பாடும் வானம்பாடி ஆகவே அதிமுகவில் இருப்பேன். எலிக்கி தலையாக இருப்பதை புலிக்கு ஆளாக இருப்பதே பெருமை. புலி என்பது அதிமுக நான் எலி என்று யாரை சொல்கிறேன் என்பது உங்களுக்கே இதற்குள் நன்கு புரிந்து இருக்கும் என்றார்.

மேலும் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற நிலையில் இதே போன்று ஜெயக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அதற்கு ஜெயக்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.