தமிழகத்தின் மூத்த அமைச்சர் பெரிய கருப்பன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆபாச நடனம் ஆடிய பெண்களை கைதட்டி ரசித்ததாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தங்களுடைய அதிகார பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் வெளியிட்டு வீடியோவையும் பதிவு செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,
கேளிக்கைகளில் மட்டுமே மூழ்கி களிப்புறுவதற்கு அரசுப் பதவி எதற்கு?
எவ்வித தகுதியுமின்றி வாரிசு அடிப்படையில் மட்டுமே இன்று துணை முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவரின் பிறந்தநாளை மூத்த அமைச்சர்கள் கொண்டாடுவது என்பதே அடிமைத்தனத்தின் உச்சம். இதில் அந்த விழாவை ஆபாச விழாவாக மாற்றி சிலாகித்துக் கொள்வது எத்தனை பெரிய கேவலம்? இப்படிப்பட்டவர்களுக்கு சுயமரியாதை குறித்தோ பகுத்தறிவு பற்றியோ பேசுவதற்குத் துளியாவது தகுதியிருக்கிறதா?
அதிலும் அரைகுறை ஆடையுடன் பெண்களை அருகில் அழைத்து நடனமாட வைத்து கைதட்டி ரசிக்கும் திமுக தலைவர்களை நம்பி, தமிழகப் பெண்கள் எப்படி தங்கள் குறைகளைக் கூறுவார்கள்? சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சுகாதாரக் குறைபாடு, ஊழல் முறைகேடு எனத் தமிழகத்தின் அரசு இயந்திரமே பழுதடைந்து கிடக்கையில் முதல்வர் முதல் மூத்த அமைச்சர்கள் வரை அனைவரும் இப்படி கேளிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடு. அதுசரி ஆடின கால்கள் அடங்குமா? காலங்காலமாக உடல்சார் அரசியலை மட்டுமே முன்னெடுத்து வரும் திமுகவினரிடம் நாகரிக நிர்வாகத்தினை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? என்று பதிவிட்டுள்ளனர்.
கேளிக்கைகளில் மட்டுமே மூழ்கி களிப்புறுவதற்கு அரசுப் பதவி எதற்கு?
எவ்வித தகுதியுமின்றி வாரிசு அடிப்படையில் மட்டுமே இன்று துணை முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவரின் பிறந்தநாளை மூத்த அமைச்சர்கள் கொண்டாடுவது என்பதே அடிமைத்தனத்தின் உச்சம். இதில் அந்த விழாவை ஆபாச விழாவாக மாற்றி… pic.twitter.com/TaVud0aksU
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 27, 2025
