பொதுவாகப் பாம்புகளைப் பார்த்தாலே அஞ்சி ஓடும் நிலையில், ஒரு இளைஞர் ராட்சச மலைப் பாம்பு (Python) ஒன்றிற்குச் சோப்புப் போட்டுக் குழந்தைக்குக் குளிப்பாட்டுவது போல் குளிப்பாட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை முதலில் பார்க்கும்போது, இந்தக் காட்சி உண்மையா என்று நம்ப முடியாமல் ஆச்சரியம் ஏற்படுகிறது.
வைரலான அந்த வீடியோவில், ஒரு இளைஞர் நீளமான, பளபளப்பான மலைப் பாம்பின் மீது துணியைப் பயன்படுத்தி சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிப்பாட்டுகிறார்.
View this post on Instagram
குளிப்பாட்டும்போது பாம்பு மிகவும் அமைதியாகப் படுத்துக் கிடக்கிறது. இளைஞர் அதன் தலையைப் பிடித்து, கழுத்துப் பகுதியிலும் சோப்புப் போட்டுத் தேய்த்தாலும், பாம்பு அவரைத் தாக்க எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதைக் கண்டுப் பலரும் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோ இதுவரை 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. “இந்த இளைஞருக்குப் பயமே இல்லையா?”, “மலைப் பாம்புக்கு இப்போது ‘ஸ்பா ட்ரீட்மென்ட்’ கிடைக்கிறதா?” போன்ற சுவாரசியமான கருத்துகளைப் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
