காட்டு விலங்குகளின் வாழ்வா? சாவா? போராட்டத்தைப் பதிவு செய்த ஓர் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு குட்டிக்குரங்கைப் (Baby Monkey) பிடித்து, ஒரு மலைப் பாம்பு (Python) அதைத் தான் பதுங்கியிருக்கும் மரத்தின் பொந்துக்குள் (Tree Hole) இழுத்துச் செல்லும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளன.

சுமார் 4 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், குட்டிக்குரங்கு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள உயிரைப் பணயம் வைத்து முழு பலத்துடன் போராடுகிறது. மலைப்பாம்பு பிடியை இறுக்க இறுக்க, குரங்கு துடிதுடிக்கிறது.

நீண்ட போராட்டத்தின் முடிவில், பாம்பு தன் பிடியில் இருந்து குரங்கின் உடலை விட்டுவிட்டு, அதன் ஒரு கையை மட்டும் வாயில் பிடித்திருந்தது. அங்கிருந்து வீடியோ துண்டிக்கப்படுகிறது.

வீடியோவின் முடிவைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், குரங்கு எப்படியும் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று சமூக ஊடகப் பயனர்கள் ஆவலுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.