ஆந்திரப் பிரதேசம், கிருஷ்ணா மாவட்டம் காங்கிபாடு, காந்தி குண்டாவைச் சேர்ந்த அஜய்குமார், காந்திபாடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணாவின் டிரைவராக பணியாற்றி வந்தவர்.
சமீபத்தில் அஜய்குமார் வசிக்கும் கிராமத்தில் கோந்தென்ம்மா அம்மன் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக, பெண்கள் அரைகுறை உடையணிந்து ஆபாச நடனம் ஆடும் மேடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் போது அஜய்குமார் மேடையில் ஏறி பெண்களுடன் சேர்ந்து ஆடினார்.
இந்த காட்சி அங்கு இருந்தவர்கள் எடுத்த வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவாகி விரைவாக வைரலானது. இதனைப் பார்த்த போலீஸ் உயரதிகாரிகள், போலீஸ் பணியில் உள்ள ஒருவரின் நடத்தைக்கு இது ஒவ்வாததாகக் கூறி, உடனடியாக அஜய்குமாருக்கு சஸ்பென்ஷன் உத்தரவு பிறப்பித்தனர்.
அஜய்குமார் முந்தைய நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற ஆபாச நடனங்களில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
