மதுரை உயர் நீதிமன்றக் கிளை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் மகாலிங்கம் (45) இன்று (நவ. 27) அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற வாசலிலேயே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம், தனது தற்கொலைக்குக் காரணம் யாரும் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.