மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கோவண்டி ரயில் நிலையத்தில் ஒரு இளைஞர் தன்னைப் பார்த்துக்கொண்டே ஒழுங்கீனமான சைகைகள் காட்டியதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அந்த இளைஞரைச் சவுக்கடி கொடுத்துத் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஹார்பர் லைனில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோவை மும்பை டிவி என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by MUMBAI TV (@mumbai_tv)

வீடியோவின் ஆரம்பத்தில், எதிர்ப்புற தளத்தில் அமர்ந்திருக்கும் அந்த இளைஞரை வீடியோ எடுத்துக்கொண்டே, அந்தப் பெண், அந்த நபர் தனக்கு எதிராகத் தொடர்ந்து பொருத்தமற்ற சைகைகளைக் காட்டுவதாகக் குற்றம் சாட்டினார். தான் வீடியோ எடுக்க ஆரம்பித்தபோது, அவர் மேலும் மோசமான சைகைகளைக் காட்ட ஆரம்பித்ததாக அந்தப் பெண் ஆவேசத்துடன் கூறினார். அந்தப் பெண்ணின் கூச்சலைக் கேட்டதும், அந்த இளைஞருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணிகள் கூடினர்.

அப்போது அந்தப் பெண், இளைஞரைத் தாக்கத் தொடங்கியபோது, சில பயணிகள் சமாதானம் செய்ய முயன்றனர். இந்தச் துணிச்சலான செயலுக்காக நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணைப் பாராட்டி வருகின்றனர். “ஒவ்வொரு பெண்ணும் இவரைப் போல தைரியமாக இருக்க வேண்டும்” என்றும், “அந்த இளைஞருக்கு ஆதரவாக நின்ற மற்ற இளைஞர்களுக்கும் பாராட்டுக்கள்” என்றும் இணையவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.