தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமைகளான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தச் செய்தி சினிமா உலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சில நாட்களிலேயே சுந்தர்.சி அந்தப் படத்தில் இருந்து விலகியதாக அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுந்தர்.சி விலகியதற்கான காரணம் குறித்து பலவிதமான வதந்திகள் பரவிய நிலையில், நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு நேர்காணலில் உண்மையான விளக்கத்தை அளித்துள்ளார். ரமேஷ் கண்ணா பேசுகையில், இயக்குநர் சுந்தர்.சி முன்பே இரண்டு படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார் என்றும், அந்தப் படங்களை விட்டுவிட்டுப் போனால் பெரிய நடிகர் படம் கிடைத்துவிட்டதால் நன்றி கெட்டத்தனமாகச் சென்றுவிட்டதாகக் கூறுவார்கள் என்று அவர் அஞ்சியதாகவும் தெரிவித்தார்.

மேலும், ரஜினி-கமல் கூட்டணிக்கு தரமான கதை கிடைத்து, அது வெற்றியாக வேண்டும் என்றால் அதற்கு நேரம் தேவைப்படும், ஆனால் தயாரிப்பு தரப்பினர் படத்தை சீக்கிரமாகத் தொடங்க வலியுறுத்தியதால், ரஜினி படத்தைத் தற்போது உடனே செய்ய சுந்தர்.சிக்கு நேரம் கிடைக்கவில்லை, எனவேதான் அவர் விலகினார் என்று தெளிவுபடுத்தினார்