சமூக வலைத்தளங்களில் ஒரு முதிய பெண்மணியின் (ஆச்சி) வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு இது கிராமப்புறத்தில் அல்லது ஒரு சாலையோர உணவகத்தில் நடப்பது போலத் தெரிகிறது.

அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்த ஆச்சியிடம் ஆச்சரியப்படும்படியான திறமை (Amazing Skill) உள்ளது” என்று பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவில், பெரிய மண் அடுப்பு (Chulha) ஒன்று உள்ளது. அதன் அருகே அமர்ந்திருக்கும் அந்தப் பெண்மணி, ரொட்டி (Roti) சுட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த அடுப்பைச் சுற்றி மூன்று பக்கங்களில் மேசைகள் போடப்பட்டு மக்கள் அமர்ந்து உணவருந்துகின்றனர். ஆச்சி சூடான ரொட்டியைச் சுட்டவுடனே, அங்கிருந்தபடியே தன் கைகளால் தூக்கி எறிகிறார். அது சரியாக, அங்கிருக்கும் ஒரு வாடிக்கையாளரின் மேசையில் விழுந்து அவருக்குப் பரிமாறப்படுகிறது.

இந்த வீடியோவை, “ஸ்விக்கி (Swiggy) மற்றும் சோமேட்டோ (Zomato) தொடங்கப்படுவதற்கு முன் இருந்த டெலிவரி முறை” என்று கிண்டலாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தச் சாகசத்தைப் பார்த்த பலரும், “இவரை NFL (அமெரிக்கன் ஃபுட்பால் லீக்) விளையாட வைக்கலாம்” என்றும், “இவர்தான் ‘நிஞ்ஜா ரொட்டி’ டெலிவரி செய்கிறார்” என்றும் கலகலப்பாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.