தமிழ்நாட்டில் முருங்கைக்காய் விலை இன்று (நவ. 24) இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிலோவுக்கு ₹100 உயர்ந்து, முருங்கைக்காய் ₹.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ₹10 முதல் ₹20 வரை உயர்ந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை காரணமாகக் காய்கறிகளின் வரத்துக் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி விலை உயர்வால், தினசரி சமையலுக்குக் காய்கறிகளை நம்பி இருக்கும் குடும்பத் தலைவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
