உத்தரப் பிரதேச மாநிலம் மீரட், கர்கௌதா (Kharkhoda) கிராமத்தைச் சேர்ந்த தீபான்ஷு என்பவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஜோயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 15 வயதுச் சிறுமிக்கும் இடையே காதல் இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கிய இவர்களது காதல் விவகாரம், இருவரும் இரு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறித் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் தீபான்ஷு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அவர் தற்கொலைக்கு முயன்ற செய்தி ஜோயாவுக்குக் கிடைத்தது.

ஆனால், அவருக்கு தீபான்ஷு இறந்துவிட்டதாகத் தவறான தகவல் கிடைத்தது. காதலன் இறந்துவிட்டான் என்று எண்ணிய ஜோயா, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், பெண் கிராமத் தலைவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். \

ஆனால், உண்மை என்னவென்றால், தீபான்ஷு உயிருடன் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தவறான தகவலால் சிறுமி உயிரிழந்த இந்தச் சம்பவம் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இரண்டு சமூகத்தினர் மத்தியிலும் மோதலை உருவாக்கியுள்ளது.