தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள நிலையில், கட்சியினர் ஒரு பிரிவினர் மாற்றுக்கட்சியில் இணையும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் , கள்ளப்புலியூர் சேர்ந்த, திமுகவின் முக்கிய முகமாகக் கருதப்படும் பழனி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர், முன்னாள் அமைச்சரும் அதிமுக முக்கிய நிர்வாகியுமான வி. சண்முகம் முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர். கட்சிக்கு இணைந்த புதிய உறுப்பினர்களை வி. சண்முகம், அதிமுகவின் துண்டு அணிவித்து வரவேற்றார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சிக்கு பலம் சேர்க்கும் விதமாக இந்த இணைப்பு நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
