ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025 அரையிறுதிப் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியிடம் சூப்பர் ஓவரில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவிய சம்பவம் இந்திய கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில், தொடரின் அதிக ரன் எடுத்தவரும், அதிக சிக்ஸர் அடித்தவருமான வைபவ் சூர்யவன்ஷிக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டதுதான் இந்தப் படுதோல்விக்கான காரணமாகக் கருதப்படுகிறது.
இந்த அதிர்ச்சிகரமான முடிவால், இந்திய அணி சூப்பர் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல், ஜிதேஷ் சர்மா மற்றும் அஷுடோஷ் சர்மா ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, வெறும் இரண்டு பந்துகளிலேயே சுருண்டது. வங்கதேசம் ஒரு வைடு பால் மூலம் இலக்கை எட்டி வெற்றி பெற்ற நிலையில், இந்திய ‘ஏ’ அணியின் வெளியேற்றம் நாடகத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது.
How on can India A coach not send a cricket atom bomb Vaibhav Suryavanshi to open in the Super over against Bangladesh yesterday ? Wasn’t even sent at 3 after the opener was dismissed first ball. Absolutely rediculous. This needs to be investigated. It’s a serious lapse.
— Makarand Waingankar (@wmakarand) November 22, 2025
“>
சூப்பர் ஓவரில் வைபவ் சூர்யவன்ஷியைப் புறக்கணித்த முடிவு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில், முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் மேலாளர் மகரந்த் வைங்கங்கர், இந்திய ‘ஏ’ அணியின் தலைமைப் பயிற்சியாளர் சுனில் ஜோஷி மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் புறக்கணிப்பு, இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இந்தியாவுக்கு இழந்த மிகப் பெரிய தவறு என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மனிந்தர் சிங் வர்ணனையின்போது தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
கேமரா பயிற்சியாளர் சுனில் ஜோஷியைப் படம் பிடித்துக்கொண்டிருந்தபோது, “இந்திய சிந்தனைக் குழு என்ன செய்கிறது என்று இன்னும் புரியவில்லை. வைபவ் சூர்யவன்ஷியை ஏன் பேட்டிங் செய்ய அனுப்பவில்லை? சுனில் ஜோஷி இப்போது என்ன எழுதுகிறார்? கப்பல் ஏற்கெனவே பயணம் செய்துவிட்டது!” என்று மனிந்தர் சிங் சாடினார்.
