மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நவம்பர் 20-ஆம் தேதி அன்று ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், நெல்லையைச் சேர்ந்த கே.பி.சரவணன் என்பவர் இந்த கட்சிப் பெயர் தொடர்பாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், தான் ஏற்கெனவே 2024-ஆம் ஆண்டு முதல் ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் அமைப்பை நடத்தி வருவதாகவும், எனவே அதே பெயரை மல்லை சத்யா பயன்படுத்தக் கூடாது என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெயரைக் கட்சிக்குப் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கே.பி.சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மல்லை சத்யாவின் புதிய கட்சி தொடக்கத்திலேயே பெயர் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
