நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் , தனது  பரப்புரைக் கூட்டத்தை டிசம்பர் 4-ம் தேதி சேலத்தில் நடத்தக் கோரி அனுமதி கேட்ட நிலையில், அத்தேதிக்கு அனுமதி மறுத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

டிசம்பர் 3-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகியவை வருவதால், பாதுகாப்புச் சவால்களைக் கருத்தில் கொண்டு அந்த தினங்களை ஒட்டிய தேதிகளில் அனுமதி வழங்க முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், டிசம்பர் 4-ம் தேதியைத் தவிர மற்ற தேதிகளில் பரப்புரைக்கு அனுமதி வழங்க முடியும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், த.வெ.க.வின் மனுவில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறிப்பிடப்படாததால், அதைத் தெளிவுபடுத்தினால் மட்டுமே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து அனுமதி வழங்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.