​திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள குளேமேனி கிராமத்தில், நகைக்காக 55 வயது மூதாட்டி சரஸ்வதி கொடூரமாக அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சரஸ்வதி வீட்டில் இருந்தபோது, உள்ளே அத்துமீறி நுழைந்த ஒரு கொள்ளைக் கும்பல், சரஸ்வதியின் காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த நகைகளைக் கழற்ற முயன்றதாகத் தெரிகிறது. அவர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்தக் கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, நகைகளுடன் தப்பிச் சென்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, இந்த கொடூரக் குற்றத்தைச் செய்த கொள்ளைக் கும்பலைத் தீவிரமாகத் தேடிவருகிறது. தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.