தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (நவ. 6) கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு நேரில் சந்தித்துப் பேசிய பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
குறிப்பாக, நடிகர் விஜய் குறித்துப் பேசிய அவர், “மக்களுக்காகப் போராடாமல், முதல்வர் பதவியின் மீது மட்டும் ஆசை வைத்துக்கொண்டு நடிகர் விஜய் செயல்படுகிறார். அவர் திட்டமிட்டு தமிழக அரசு மீது தவறான பரப்புரைகளைச் செய்து வருகிறார். இதுபோன்ற நடிகர்களை நம்புவது தமிழக மக்களுக்கு அவமானம்” என்று தனியரசு ஆவேசமாகச் சாடியுள்ளார். முதல்வர் உடனான சந்திப்புக்குப் பிறகு தனியரசுவின் இந்த நேரடித் தாக்குதல் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.
