விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தபின் ரத்து செய்யும்போது குறைவான அளவிலேயே ‘ரீஃபண்ட்’ (Refund) பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், பயணிகளுக்குச் சாதகமாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு முக்கியச் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரைவு விதிகளின்படி, பயணிகள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் (48 மணி நேரத்திற்குள்), எந்தவொரு கட்டணமும் செலுத்தாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியும். இந்த அறிவிப்பு, விமானப் பயணிகளிடையே பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
