பொதுத்தேர்வு தேதிகள் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியினை நாளை (நவம்பர் 4, 2025) காலை 10.30 மணிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவிக்க இருக்கிறார். இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த முக்கிய அறிவிப்பில், 10-ஆம் வகுப்பு மற்றும் +2 வகுப்புகளுடன், கடந்த ஆண்டு 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியையும் அமைச்சர் அவர்கள் அறிவிக்க உள்ளார். எனவே, தேர்வுக்குத் தயாராகும் அனைத்து மாணவச் செல்வங்களே, இந்த முக்கிய அறிவிப்பைக் கேட்டு தெரிந்துகொள்ள நீங்கள் தயாரா…?
