இந்தியாவில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரிலும் நடந்து வருகின்றன. கடந்த புதன்கிழமை இங்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரு போட்டி நடைபெற்றது. இன்று ஆஸ்திரேலியா அணி தனது கடைசி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்காக அவர்கள் இந்தூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர்.
போட்டி முடிந்த அடுத்த நாள், வியாழக்கிழமை, ஆஸ்திரேலிய அணியின் இரண்டு வீராங்கனைகள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அருகில் உள்ள ஒரு கஃபேவுக்கு நடந்து சென்றனர். அப்போது, ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்தில் அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்களை விரும்பத்தகாத வகையில் தொட்டுவிட்டு தப்பிச் சென்றார். இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வீராங்கனைகளிடம் விசாரித்து, மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து குற்றவாளியைப் பிடித்தனர்.
