வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (அக்.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசர அவசியமின்றி வெளியே செல்லாமல் இருக்கவும், விவசாயிகள் மற்றும் பயணிகள் முன்னெச்சரிக்கையாக செயல்படவும் வானிலை மையம் ஆலோசனை வழங்கியுள்ளது