தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று  (அக்.23) பள்ளிகள் ,அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று  காலை முதலே இடையறாது மழை பெய்து வருவதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் இந்த முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

இவ்விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 15ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிற மாவட்டங்களிலும் வானிலை நிலவரத்தைப் பொருத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன