அண்ணாதுரை பிறப்பித்த திராவிட கொள்கைகளின் பெயரில் ஆட்சி நடத்தும் திமுக அரசு விவசாயிகள் நலனை புறக்கணித்து வருகிறது என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 10 நாட்களாக நெல் மூட்டைகளுக்கு எடை போடாமல் வைக்கப்பட்டதால், நெல்மணிகள் களங்களில் குவிந்து கிடப்பதாக அதிமுகவின் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு வெறும் 800 மூட்டைகளுக்கு மட்டுமே எடை போடப்படுகிறது எனவும், அதே வேளையில் அதிமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு 1000 மூட்டைகள் எடை போடப்பட்டதாகவும் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் உழைப்பை மதிக்கும் அரசு எது என்பதற்கு மக்கள் தாமே தீர்ப்பு அளிப்பார்கள் என அதிமுக தெரிவித்துள்ளது.
விடியா திமுக அரசு கடந்த 10 நாட்களாக நெல் மூட்டைகளை எடை போடவில்லை,இதனால் நெல்மணிகள் குவிந்து கிடக்கின்றன.
திமுக ஆட்சியில் 800 மூட்டைகள் ஒரு நாளைக்கு எடை போடப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் 1000 மூட்டைகள் ஒரு நாளைக்கு எடை போடப்பட்டது.
மேலும் விவசாயிகள் கொண்டு வரப்படும் நெல்… pic.twitter.com/AHMjfWFwDh
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) October 22, 2025
“>
மேலும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குண்டான பணம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார். இதேசமயம், தற்போதைய விவசாயிகள் பிரச்சினையை மறைக்க, அமைச்சர் சக்கரபாணி “விடுமுறை நாட்களிலும் கொள்முதல் நடைபெறுகிறது” என தவறான கருத்தை வெளியிட்டுள்ளார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு பதிவை அதிமுகவின் ஐ.டி. விங் பிரிவு சமூக வலைதளங்களில் பகிர்ந்தநிலையில் அந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
