தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் நிவாரண முகாம்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை ஒருநாள் முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்யலாம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் மழை முன்னேற்றத்தை நடவடிக்கை காரணமாக தற்போது வேலூர் மாவட்டத்தில் மாலை 3 மணியோடு பள்ளிகளை முடித்து மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் இன்று மாலை 3 மணி வரை மட்டுமே பள்ளிகளை நடத்த வேண்டும் எனவும் அதன் பிறகு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
