தஞ்சாவூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தில் நாளை (அக்.22) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை தொடரும் அபாயம் உள்ளதையடுத்து, வெள்ளப்பெருக்கும் பிற பாதிப்புகளும் ஏற்படலாம் என முன்னெச்சரிக்கையாக திருவாரூர், தஞ்சாவூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (அக்.22) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கனமழை பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் மாவட்ட வாரியாக விடுமுறை அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது