சமையலறையில் தவறி எண்ணெய் சிந்திவிட்டால், அதை எளிதாக சுத்தம் செய்யும் டிப் ஒன்று இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பேசிய நபர், எண்ணெய் சிந்திய இடத்தில் சிறிது மைதா மாவு (கோதுமை மாவு அல்லது கான்பிளவர் என்று கூறப்படும் பொடி) தூவி, நன்றாக கிளறி விட வேண்டும் என்று கூறுகிறார். இதனால் எண்ணெய் மாவுடன் ஒட்டி, பிசுபிசுப்பு இல்லாமல் மாறிவிடும்.
பிறகு, ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது துணியை வைத்து துடைத்தால், எண்ணெய் எளிதில் நீங்கிவிடும் என்று அவர் விளக்குகிறார். இந்த எளிய முறை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது வீட்டு வேலைகளுக்கு மிகவும் பயனுள்ள டிப் ஆகும்.
