21 வயது இளைஞர் ஒருவர் முடிவு கட்ட புற்றுநோயுடன் போராடி வருகிறார். அவர் ரெடிட் தளத்தில் ஒரு உருக்கமான பதிவு எழுதியுள்ளார். அதில், “புற்றுநோய் வென்றுவிட்டது, பை கைஸ்!!!” என்று கூறியுள்ளார். 2023-ல் ஸ்டேஜ் 4 கொலோரெக்டல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல கீமோதெரபி சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனை தங்கல்களுக்குப் பிறகு, மருத்துவர்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் உயிர் பிரியலாம் என்று அவர் எழுதியுள்ளார்.

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தெருக்களில் விளக்குகள் ஏற்றப்படுவதை பார்த்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். “அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் நான் நினைவுகளில் மட்டுமே இருப்பேன்” என்று கூறியுள்ளார். பயணம் செய்ய வேண்டும், சொந்தமாக ஏதாவது தொடங்க வேண்டும், நாய் ஒன்றை தத்தெடுக்க வேண்டும் என்ற கனவுகள் இருந்தன. ஆனால் நேரம் இல்லை என்று நினைத்து அவை மறைந்துவிடுவதாக எழுதியுள்ளார். வீட்டில் பெற்றோரின் முகத்தில் உள்ள துக்கத்தை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரையும் உருக்கமாக்கியுள்ளது. பலர் ஆறுதல் தெரிவித்து, வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். “இது போன்ற நினைப்பு மனிதத்தன்மையை காட்டுகிறது” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். வாழ்க்கையின் சிறிய சண்டைகள் எதுவும் பொருளற்றவை என்று மற்றொருவர் கூறியுள்ளார். ஏதேனும் அற்புதம் நிகழ வேண்டும் என்று ஒருவர் வாழ்த்தியுள்ளனர். இது வாழ்க்கையின் நிலையாமையை நினைவூட்டுகிறது.