கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பை “நீதி வென்றது” எனக் கூறி, கட்சித் தலைவர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டதாகவும், உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த முடிவை பெரும்பாலானோர் வரவேற்க இது மாநில அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வருகின்றனர்.

இதே நேரத்தில், பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் இந்த விவகாரம் குறித்து தனது சமூக வலைதளத்தில் விமர்சனப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த தீர்ப்பை கொண்டாட வேண்டியது உண்மையில் எடப்பாடிதான்” என்று தொடங்கி, வழக்கின் பின்னணியில் நடந்த அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுல சோகம் என்னன்னா…

நியாயமாக இந்த தீர்ப்பை கொண்டாட வேண்டியது எடப்பாடி தான்.

கரூர் தவெக நிர்வாகிகள பக்கத்துல வச்சுகிட்டே அதிமுகவின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர இறந்தவங்க வீட்டுக்கு அனுப்பி ஆதார் கார்ட வாங்கி, வெத்துப்பேப்பர்ல கையெழுத்து போட வச்சு, இவனுக கேக்காத CBI ஐ அப்பாவி… pic.twitter.com/RFuOzwZIFD

— Milton (@Milton_Off) October 13, 2025

“> 

மேலும், சிலரின் அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவி மக்களின் பெயரில் சிபிஐ விசாரணை கோரப்பட்டதாகவும், இந்நிலை குறித்து விரிவாக ஒரு பேட்டியிலும் விளக்கமளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு, ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன.