இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ பார்ப்பவர்களை பதற வைத்திருக்கிறது. ஒரு பூங்காவில் சிறு குழந்தை மகிழ்ச்சியாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. திடீரென வானத்தில் இருந்து ஒரு பெரிய கழுகு பறந்து வந்து, தனது கூர்மையான கால்களால் குழந்தையைத் தூக்க முயற்சிக்கிறது. இந்தக் காட்சி மிகவும் பயமுறுத்துவதாக இருக்கிறது, பார்க்கும்போதே நெஞ்சு படபடக்கிறது.
Dogs are always loyal pic.twitter.com/Qe6Kz8CEFN
— Naaz🌙 (@callme_Naaz786) October 13, 2025
ஆனால், அந்த நேரத்தில் அங்கிருந்த குடும்பத்தின் வளர்ப்பு நாய் வேகமாக ஓடி வந்து கழுகின் மீது தாக்குதல் நடத்தி, அதை விரட்டி அனுப்புகிறது. இதனால் குழந்தை பத்திரமாகக் காப்பாற்றப்படுகிறது. இந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது என்றாலும், நிஜமாக நடப்பது போலவே இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் @pataventura_ என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளி, லட்சக்கணக்கில் பார்வைகளைப் பெற்று, மக்களை நாயின் தைரியத்தைப் புகழ வைத்திருக்கிறது.
