தவெக தலைவர் விஜயின் அணுகுமுறையை விமர்சித்த இயக்குநரும், நடிகருமான அமீர், நேற்று (அக்.11) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது கருத்து தெரிவித்தார்.

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேசிய அவர், “தவெகவிற்கு நன்னடத்தை மற்றும் அரசியல் அனுபவம் கொண்ட நல்ல வழிகாட்டும் தலைவர்கள் தேவை. இந்நிலையில் விஜயின் அணுகுமுறை சரியானதல்ல” என தெரிவித்தார்.

மேலும், “பணக்காரர்கள் மக்களுக்காக அரசியல் செய்ய முடியாது. பொதுவெளியில் பேசும் வார்த்தைகளும், நீதிமன்றங்களில் வழங்கப்படும் பதில்களும் வெவ்வேறாக இருக்கக்கூடாது. பொதுவெளியில் ‘சதி’ எனக் கூறும் ஒருவர், நீதிமன்றத்தில் வேறு விதமாக பேசுவது ஆபத்தான நிலையை உருவாக்கும்” என அவர் எச்சரிக்கை விடுத்தார். அவரது இந்தக் கருத்துகள், தவெக அரசியல் போக்கை மீண்டும் விவாதத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.