சமூக ஊடகங்களில் தினமும் பல வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. அவற்றில் சில உண்மையானவையாகவும், பல ஸ்கிரிப்ட் செய்யப்பட்டவையாகவும் இருப்பினும், பெரும்பாலானவை “உண்மை சம்பவம்” எனக் கூறி வைரலாகின்றன. அவற்றில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு வீடியோ, ஒரு பெண் காரின் பெட்ரோல் டேங்கிலிருந்து பாட்டிலில் பெட்ரோல் எடுப்பதை காட்டுகிறது.

வீடியோவில், ஒரு நபர் அந்த பெண்ணிடம் “பாட்டிலை எடுத்துவிடுங்கள்” என கூற, அவள் “இதை என் ஸ்கூட்டரில் நிரப்பப் போகிறேன்” என பதிலளிக்கிறார். அதற்கு அந்த நபர், “இது என் கார்” எனக் கூறி கதவைத் திறந்து காட்டுகிறார். அதற்கு பெண், “அனைத்து கார்களுக்கும் ஒரே மாதிரி சாவிகள் இருக்கும்” என வாதிடுகிறார்.

இந்த சம்பவம் உண்மையா அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், கார் பூட்டப்பட்ட நிலையில் பெட்ரோல் டேங்க் எப்படித் திறந்திருக்கும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

இந்த வீடியோவை சமூக ஊடக தளம் X-ல் @abhishek902444 என்ற பயனர் பகிர்ந்துள்ளார். “திருடன் காவல் அதிகாரியைத் திட்டும் நேரடி உதாரணம்! இத்தனை தன்னம்பிக்கை எங்கிருந்து வருகிறது?” என்ற தலைப்பில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் வீடியோ உண்மையானதா இல்லையா என்பது உறுதி செய்யப்படாதபோதிலும், அது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும் நகைச்சுவையையும் கிளப்பியுள்ளது.