நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தந்தையைப் போல நடிகராக அல்லாமல் இயக்குநராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கான பட பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
ஆனால், அந்த நிகழ்வில் விஜய் கலந்து கொள்ளாதது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியது. இதனைச் சுற்றி பல்வேறு ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. குறிப்பாக, தற்போது விஜய் பனையூரிலுள்ள தனது இல்லத்தில் தனியாக வசித்து வருவதாகவும், அவரது மனைவி, மகன் ஜேசன் சஞ்சய், பெற்றோர் உள்ளிட்டோர் அங்கில்லை என்பதும் சில சேனல்கள் மற்றும் யூடியூப் வலைத்தளங்களில் பரப்பப்பட்டது.
இந்நிலையில் “U2Brutus” என்ற யூடியூப் சேனலில் வெளியான விமர்சன வீடியோ. ஒன்றில், “நாய்க்குட்டியை கொஞ்ச நேரம் இருக்கு சொந்த பையனோட பட பூஜைக்குப் போக நேரமில்லையா?” என கேள்வி எழுப்பி, விஜய் திரிஷா உடன் எடுத்த புகைப்படத்தை உள்நோக்கத்துடன் இணைத்து விவாதித்துள்ளனர். இதனால், “விஜய் தனது மகனின் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை, ஆனால் திரிஷாவை சந்திக்கிறார்” என்ற தவறான செய்தி பரவியுள்ளது.
நாய்க்குட்டிய கொஞ்சுறதுக்கு நேரமிருக்கு.. பையனோட பட பூஜைக்கு போக நேரமில்லையா??? pic.twitter.com/AfCqMVE6S8
— U2 Brutus (@U2Brutus_off) October 8, 2025
“>
இதையே அடிப்படையாகக் கொண்டு சிலர் விஜய் குடும்பத்திற்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், ரசிகர்கள் இதனை ஆதாரம் அற்ற வதந்தி எனக் கூறி, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் இவ்வாறு அரசியல் அல்லது சினிமா நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
