தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் லட்சுமிமேனன். இவர் கொச்சியில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு சென்ற போது ஐடி ஊழியர் ஒருவரை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தாக்கி கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக முன்ஜாமின் கேட்டு அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் சமரசம் செய்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததால் லட்சுமிமேனனுக்கு முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது அவருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை என எதிர்மனுதாரர் கூறியதால் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை லட்சுமிமேனன் கடைசியாக தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
