இன்றைய காலகட்டங்களில் பல்வேறு விதமான செயல்களுக்கும் ட்ரோன் பயன்படுத்துகிறார்கள். நாடுகளுக்கு இடையே போரில் ட்ரோன்கள் பயன்படுத்தும் நிலையில் திருமண நிகழ்ச்சிகளின் போது போட்டோ மற்றும் வீடியோ எடுக்க போன்றவைகளுக்கும் அது பயன்படுகிறது. இதேபோன்று பல்வேறு விதமாக  டிரோன் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

அதாவது ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் சேவலில்  டிரோன் கட்டி அதனை மேலே பறக்க விட்டார். அவைகளும் மெதுவாக அச்சமின்றி பறந்த நிலையில் பின்னர் கீழே இறக்கினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ஒரு பயனர் இனி சிக்கன் ட்ரோன் என்று தான் அழைக்க வேண்டும் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இதே போன்ற பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருவதோடு லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.