தினமும் அலுப்பழிக்கும் வேலை, ஓய்வில்லா ஓட்டம், வீட்டு பொறுப்புகள் என இவை எல்லாம் சேர்ந்து “வாழ்க்கை சமநிலை” என்பதைத் திசைதிருப்பி விட்டுள்ளன. சமீபத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், ஒரு கணவன் வீட்டுக்குத் திரும்பும் போது, அவரது மனைவி கோவப்படுகிறார்.
Imagine working 16 hours every day to feed your family.
You come home, and within a minute, your wife starts shouting at you.
What work did she do? Cooking twice.
Such mental torture makes men take their own lives.
Also, listen to her accent.pic.twitter.com/2nMMQRlOyP
— ︎ ︎venom (@venom1s) October 4, 2025
“72 மணி நேரம் ரயில்வேக்கு குடுக்கறீங்க, 16 மணி நேரமாவது வீட்டுக்கு குடுங்க!” என்று அவர் சீற, “நானும் 72 மணி நேரம் வெளியே இருக்கறேன் பாருங்க” என சவால் விடுகிறாராம். வீடியோவில் கணவன் அமைதியாக நின்று கொள்கிறார். அலுப்பும், மனச்சோர்வும் நிறைந்த முகத்தை கண்டு ரசிகர்கள் உருகியிருக்கிறார்கள்.
இந்த வீடியோ வெறும் ஒரு குடும்பம் பற்றியதல்ல; இது இந்நாளில் ஒவ்வொரு வேலைக்காரனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிதான் என பெரும்பான்மையினர் சொல்லி வருகின்றனர். “@venom1s” எனும் X பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோக்கு ஏற்கனவே 9.6 லட்சம் பார்வைகள் வந்துள்ளன.
நெட்டிசன்கள் இருபுறத்தையும் புரிந்து கொண்டு, உணர்ச்சிபூர்வமாக பதிலளித்துள்ளனர். “அவங்க கணவனை நேசிக்கிறதால தான் கோபப்படுறாங்க” என ஒருவர் எழுத, மற்றொருவர் “உடனே தண்ணி குடிக்க கொடுத்திருக்கலாமே அக்கா!” என வருத்தப்படுகிறார்.
