தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் விஜய் மீது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதே நேரத்தில் அவருக்கு ஆதரவாகவும் பேசுகிறார்கள். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது,

> “கரூரில் நடைபெற்ற நிகழ்வில் நடந்த விபத்தில், விஜய்யை நேரடியாக குற்றவாளி எனக் கூற முடியாது. அரசியல் ஆசைக்காக, விஜய்யை ஒரு–இரு நாட்கள் கைது செய்து பின்னர் விடுவிக்கலாம் என்ற எண்ணத்தில் சிலர் செயல் படுகிறார்கள். இது சரியானதல்ல.

தவெக நிர்வாகிகள் மீது தவறுகள் இருக்கலாம். ஆனால் அதற்காக விஜய்யை குற்றவாளி ஆக்க முடியாது. அவர்களை பாஜகவினர் பாதுகாக்கிறார்கள் என்று கூறுவது தவறு. தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத அரசு பாஜக அவர்களை பாதுகாப்பதாக கூறுகிறது. விஜய்க்கு அடைக்கலம் கொடுக்க மற்றும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு கிடையாது என்றார்.

ராகுல் காந்தி மணிப்பூருக்கு செல்லலாம், ஆனால் பாஜக கரூர் வரக்கூடாதா? பாஜகவின் முக்கிய எதிரி திமுகதான். திமுகவையே வீழ்த்துவதே எங்கள் முக்கிய இலக்கு. நயினார் நாகேந்திரனுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. டிடிவி தினகரனை நான் மதிக்கிறேன். கூட்டணிக்குள் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சாதாரண விஷயம். விரைவில் அனைத்தும் தெளிவாகிவிடும்.” என அவர் தெரிவித்துள்ளார்.