சமூக வலைதளங்களில் பிராங்க் வீடியோக்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் அவை உண்மையிலேயே பயமூட்டும் வகையிலும், சில நேரங்களில் சிரிப்பூட்டும் வகையிலும் அமைந்திருக்கின்றன. இந்நிலையில், தற்போது ஒருவனின் ‘நாய்க் கடித்தவர்’ நடிப்பை மையமாகக் கொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலை வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by ꧁༺Mr_RAUSHAN_SINGH༻꧂ (@roushan_vlogs02)

வீடியோவில் அந்த நபர், நாயாக நடித்து மக்கள் மத்தியில் திடீரென குரைத்தும், கடிக்க முயற்சித்தும் அவர்களை ஓட ஓட வைக்கிறார். வீடியோவில் சிலர் சாலையோரம் அமர்ந்திருக்கும் போது, அந்த பிராங்க் செய்வோர் அருகில் வந்து, “நாய்க் கடித்தா என்ன செய்வீங்க?” என கேட்கிறார். பின்னர், “என்னை நாய் கடித்து ஒரு மாசம் ஆகுது, எனக்கு இன்ஜெக்‌ஷன் போடல… இப்போ கறி சாப்பிடணும் போல இருக்கு” என்று கூறுகிறார்.

இதையடுத்து அவர் திடீரென நாயாக குரைக்க தொடங்குகிறார். அதிர்ச்சி அடைந்த மக்கள் பயந்து ஓடிச் செல்கிறார்கள். ஒருவரோ கையிலுள்ள குச்சியைக் கொண்டு தாக்க முயற்சிக்க, அப்போதுதான் அவர் இது ஒரு பிராங்க் என்று விளக்கம் அளிக்கிறார். இந்த வீடியோ “@roushan_vlogs02” என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு 4 கோடி பார்வைகள் மற்றும் 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸைப் பெற்றுள்ளது.

பலரும் இந்த வீடியோக்கு தங்களது கமெண்ட்களையும் பதிவிட்டுள்ளனர். “வாழ்க்கையையே விளையாட்டுல எடுத்துட்டாரு இந்த ஆள்,” என்றும், “நீங்க எங்க முன்னாடி இப்படிப் பண்ணீங்கனா நாங்களும் பைத்தியமாய்டுவோம்,” என்றும் சிலர் எழுத, “எனக்கு சிரிச்சு வயிற்று வலிக்குது,” என்றும் மற்றொரு நபர் கமெண்ட் செய்துள்ளார். வீடியோ பரவி, இளைய சமுதாயத்தில் கலகலப்பை உருவாக்கியுள்ளது.