ஆந்திர மாநிலத்தில் நிலவும் கனமழையால் வேலூர் மாவட்டத்தின் மோர்தானா அணையில் தொடர்ந்து 2,300 கனஅடி நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த நீர் நிரம்பிய நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படுகின்றது.

இதன் காரணமாக குடியாத்தம் பகுதியில்  கவுண்டன்ய மகாநதி கரையோர பகுதிகள் வெள்ள அபாயத்திற்குள்ளாக இருக்கக்கூடும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளர். எனவே, பொதுமக்கள் ஆற்றில் இறங்குதல் மற்றும் கரையோரங்களில் செல்லுதல் போன்ற செயல்களை தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை பொதுமக்கள் கவனமாக எடுத்துக்கொண்டு, தங்களது பாதுகாப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.