தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர்   புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக இருப்பது தொடர்பாக, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். “புஸ்ஸி ஆனந்த் சரணடைவதே மானத்துடன் முடிவுக்கு வரக்கூடிய ஒரே வழி” என அவர் கூறியதுடன், காவல்துறை அவரை கைது செய்தால் அது மேலும் அவமானமாகும், இதற்குமேல் தலைமறைவாக வாழும் நிலை தொடருமெனில், அவர் கட்சியின் பொதுச்செயலாளர் மட்டுமல்ல, ஒரு மாவட்ட நிர்வாகியாக கூட தகுதி இல்லாதவராக மதிப்பீடு செய்யப்படும் என கூறியுள்ளார்.

மேலும், “இவரை சுட்டுப் பிடிக்க உத்தரவு போடாதீர்கள் ஆபீசர்!” என கிண்டலாக  கூறியது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாரிதாஸின் இந்த கூற்று, அவரின் ஆக்கப்பூர்வமான அரசியல் விமர்சனத்தைவிட, தனிப்பட்ட கோபக் குரலாகவே எதிர்கொள்ளப்படுகிறது. இது அரசியல் நெறிமுறைகள் மற்றும் பொது விவாதங்களின் தரம் குறைவாகும் நிலையை ஏற்படுத்தும் என்பதாலேயே, அவரின் இந்த பதிவுகள் சீரிய விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.