சினிமா கதைகளை வென்ற வெறித்தனமான உண்மை சம்பவம் ஒன்று சீனாவின் புஜியான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. குவான்ஜோ நகரை சேர்ந்த 48 வயதுடைய குவின் என்ற பெண், ஒரு நாள் காட்டுக்குள் நடந்து சென்று சுயமாக சாகசம் அனுபவிக்க நினைத்தார்.
ஆனால், திடீரென புல்வெளிகளால் மறைக்கப்பட்ட ஒரு பழைய கிணற்றில் தவறி விழுந்தார். அந்த பாளம் மிகவும் ஆழமாக இருந்ததாலும், வெளியே வர முடியாமல், அந்த இடத்தில் 54 மணி நேரம் அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளில் உயிர் தப்பிக்க போராடினார். கொசுக்கள், நீரில் பாம்புகள் என ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியில் அந்த பெண் இரண்டரை நாட்கள் போராடியுள்ளார்.
ஒரு நீர்ப்பாம்பு கையை கடித்தும், அதில் விஷம் இல்லாதது அதிர்ஷ்டமென்றே கூறவேண்டும். உயிரிழப்பே நிச்சயம் என்று தோன்றிய தருணங்களில் கூட, தனது குடும்பத்தை நினைத்து, தைரியத்துடன் உயிர் தப்பிக்க வேண்டும் என்று உறுதியடைந்தார். இறுதியாக, அந்தப் பகுதியில் தேடலை மேற்கொண்ட ரெஸ்க்யூ டீம், ஒரு சிறிய சத்தத்தைக் கேட்டு தேடியபோது, புழுதி மற்றும் செடிகள் போக்கப்பட்ட பின் கிணற்றில் சிக்கியிருந்த அந்த பெண்மணியை கண்டனர்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு பக்கட் எலும்புகள் முறிந்துள்ளதுடன், அவரது கைகளில் தீவிரமான காயங்களும் ஏற்பட்டுள்ளன. தற்போது அவரது நிலை நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மனதளவிலான துணிச்சலும், உயிர் தப்பிக்க அவ்வளவு நேரம் போராடிய சக்தியும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
