ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை அமலுக்கு வந்துள்ளன. இந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோவில் மழை பெய்யும் பொது உணவு டெலிவரி செய்தால் தனியாக வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இது மக்களுக்கு சுமையாக இருக்கும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்புகைப்படத்தில் ஸ்விக்கியில் மழை கட்டணம் ரூ.25 என்றும் அதற்கு ஜிஎஸ்டி என்று ரூ.4.50 கட்டணம் என மொத்தமாக ரூ.29.50 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சியும் கோபமும் தெரிவித்து வருகின்றனர். மழை போன்ற இயற்கை நிகழ்வுக்கு கூட வரி விதிப்பது தவறு என்று பலர் விமர்சித்துள்ளனர். இந்த வைரல் பதிவு, ஜிஎஸ்டி அமலின் புதிய அம்சங்களைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
After historic GST reforms, even Lord Indra has been brought under the tax net.
Now when it rains, you get ₹25 Rain Fee + 18% GST = ₹29.50 😂
Next up:
👉Sunlight Convenience Fee 🌞
👉Oxygen Maintenance Charge 💨
👉GST on Breathing, Pay as you inhale pic.twitter.com/JdtHfr715G— Ashish Gupta (@AshishGupta325) September 22, 2025
அந்த பதிவில், “மழை கடவுளான இந்திரனுக்கும் வரி போட ஆரம்பித்துள்ளார்கள். இனிமேல் வெயில் அடித்தால் அதற்கு ஒரு கட்டணம், ஆக்சிஜனுக்கு ஒரு கட்டணம், மூச்சு விடுவதர்க்கு ஒரு கட்டணம் என்று கூட வசூலிக்க வாய்ப்புள்ளது” என்று அவர் கிண்டலடித்துள்ளார். இந்த கிண்டல் பதிவு நெட்டிசன்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை ரீபோஸ்ட் செய்து, அரசின் வரி கொள்கைகளை விமர்சித்து வருகின்றனர். ஜிஎஸ்டி மறுசீரமைப்பின் நன்மைகளுக்கு மத்தியில், இத்தகைய சிறிய கட்டணங்களுக்கும் வரி விதிப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
