கன்னட திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ படத்தின் தொடராக உருவாகியுள்ள ‘காந்தாரா – சாப்டர் 1’ படத்தின் டிரெய்லர் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லரை தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில், நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘காந்தாரா’ திரைப்படம் கர்நாடகா மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் அபார வெற்றியைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக உருவான ‘காந்தாரா – சாப்டர் 1’ படம், அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அஜனீஷ் லோக்நாத் இசையமைக்க, ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை உலகம் முழுவதும் 30 நாடுகளில் வெளியிடும் திட்டம் படக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தற்போது ரசிகர்கள் ட்ரைலர் வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.