பழம்பெரும் நடிகை எம்.என் ராஜம். இவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த 1950 முதல் 1960 வரை முன்னணி நடிகையாக வலம் வந்த எம்என் ராஜம் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் ரத்தக்கண்ணீர், பாசமலர், நாடோடி மன்னன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரை கவுரவிக்கும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
