2025 ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியை கேள்விக்குள்ளாக்கும் வகையில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் வாசிம் அக்ரம் கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளார்.

ஃபகர் ஜமானின் அவுட் நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், “ஏமாற்றமின்றி ஒருபோதும் வெல்ல முடியாது. எந்த பக்கக் சரியான கோணமும் இல்லாதபோது, பேட்ஸ்மேனுக்கு சந்தேகத்தின் பலனை(சாதகமாக)  தர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தில், சாம்சன் எடுத்த கேட்ச் குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் அதிக அதிருப்தியில் உள்ளனர். பந்து தரையில் பட்டதற்கு பின் கேட்ச் பிடிக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர் .

“>

 

போட்டியின் மூன்றாவது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்து, ஃபகர் ஜமானின் பேட்டின் வெளிப்புற விளிம்பில் பட்டு  விலகியது. விக்கெட் கீப்பராக இருந்த சஞ்சு சாம்சன், விறுவிறுப்பான அந்த கேட்ச் ஒன்றை பிடித்தார். இதனால், ஜமான் 15 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியனை நோக்கி திரும்பினார்.

இருந்தபோதிலும், இந்த அவுட் சரியானதா எனப் பலர் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் ரசிகர்கள் ஜமானிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்பார்த்த நிலையில், அவரது திடீர் அவுட் அவர்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்த ஜமான், 166.66 ஸ்ட்ரைக் ரேட்டில் 15 ரன்கள் எடுத்திருந்தார்.