ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கஜூரியா லாஹ்சி என்ற அணையின் மேல் இளம்பெண் ஒருவர் ஏறி நின்று தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் இளம் பெண்ணை கீழே இறங்கி வருமாறு அழைத்துள்ளனர். எனினும் இளம்பெண் தற்கொலை செய்வதற்காக அணையின் முனைப்பகுதிக்கு சென்றார்.

இதனால் அங்கிருந்த வாலிபர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு இளம் பெண்ணை காப்பாற்றினார். எனினும் இளம்பெண் மீண்டும் தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்த நிலையில் மற்றொரு நபரும் அவரை காப்பாற்ற முன் வந்தார். இவ்வாறு இளம் பெண்ணை காப்பாற்றிய வாலிபரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

அதனைத் தொடர்ந்து இளம்பெண் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அணையின் மேல் ஏறி நின்று இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.