அதிமுக கட்சி ஒருமித்தமாக வேண்டும் என வலியுறுத்தியிருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு வழங்கியிருந்தார்.
ஆனால், அந்தக் காலக்கெடு செப்டம்பர் 15ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இதுவரை அவர் எந்தவிதமான செயல்பாடும் மேற்கொள்ளாமல் மௌனமாக இருப்பது கட்சி உறுப்பினர்களிடையே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நேற்று செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவில் சிலர் புதியதாக சேர்க்கப்பட்டபோதும், அவர் முகத்தில் எந்தவிதமான மகிழ்ச்சி தெரியவில்லை என்பதும் கவலைக்கிடமான சூழலை உருவாக்கியுள்ளது.
இதனால், “செங்கோட்டையன் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்னடைய விரும்புகிறாரா?”, “கட்சியை ஒன்று சேர்க்க விரும்பும் அவரது முயற்சிக்கு ஆதரவு இல்லையா?”, “வழி தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாரா?” என்ற பல்வேறு கேள்விகள் அதிமுக நிர்வாகிகளிடமும், எதிர்க்கட்சிகளிடமும் எழுந்துள்ளன.
கட்சியின் தற்போதைய பரபரப்பான சூழலில், மூத்த தலைவர்களின் நிலைபாடுகள் மிக முக்கியமானது என்பதால், செங்கோட்டையன் மீண்டும் பேசுவாரா, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பாரா என்பதைக் கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
