தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த வாரம் திருச்சியில் தன்னுடைய முதல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் அரியலூரிலும் தொடர்ந்து மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பெரம்பலூரில் பிரச்சாரம் செய்வதாக இருந்த நிலையில் நேர தாமதம் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நாளை நடிகர் விஜய் நாகையில் பிரச்சாரம் செய்ய இருக்கும் நிலையில் போலீசார் அதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த நிலையில் நாளை நாகையில் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்யும் போது உயர் மின்னழுத்த கம்பிகளில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என தற்போது நாகை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளர் மனுதாக்கல் செய்துள்ளார். அதாவது நடிகர் விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பிகளில் மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது மின் ஊழியர்களின் நியமித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரச்சாரத்திற்கு பாரபட்சம் இன்றி அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்திரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கில் நீதிமன்றம் பொது சொத்துகளுக்கு சேதாரம் ஏற்படுவதற்கு இழப்பீடு வசூலிக்கும் விதமாக முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட பணத்தை டெபாசிட் செய்யும் வகையில் காவல்துறை விதிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.