டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய அரசியல் ஆலோசனைகளில் ஈடுபட்டார். அதன் பின் வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமியின் வீடியோவொன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் காரில் செல்லும் போது அவர் தனது முகத்தை மறைத்தது போல ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகியது.
இந்த வீடியோவை வைத்து சிலர் திட்டமிட்டு அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். “அமித் ஷா வீட்டில் இருந்து வெளியே வரும்போது நான் என் முகத்தைத் துடைத்தேன். “முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. முகம் துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது? அந்த நேரத்தில் எனக்கு கார் கிடைக்கவில்லை.
அதனால்தான் வேறு வேறு கார்களில் பயணித்தேன். ஒரு முதலமைச்சர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். இப்படி பேசுவது அவருக்கு அழகல்ல. இனிமேல் Rest Room போனால் கூட உங்களிடம் கேட்டு தான் போகணும் போல? என சாடிய அவர், “இது தான் இன்றைய அரசியல் நிலைமை” என கூறினார். இவரது பதில்கள் தற்போது தங்களது ஆதரவாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.
