தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து வருகிற 20-ஆம் தேதி நாகையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்பிறகு சென்னையில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு காவல் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பிரச்சாரத்திற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் பாரபட்சமின்றி அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் பொதுக்கூட்டத்தின்  போது பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவினை அனைத்து கட்சிகளுக்கும் பொருந்துமாறு வகுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் கிடையாது. பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்திற்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும் என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், விஜய் பிரச்சாரத்தின் போது பொது சொத்துகளுக்கு சேதமடைந்ததை குறிப்பிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையையும் டெபாசிட் செய்யுமாறு புதிய விதிமுறைகளை வகுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்ற போது ஏற்பட்ட பொது சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த விவகாரத்தில் தலையிட நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.